யப்பானில் டயர் தொழிற்சாலையில் கத்திக்குத்து: 15 பேர் காயம்


மத்திய ஜப்பானில் உள்ள ஒரு டயர் தொழிற்சாலையில் இன்று வெள்ளிக்கிழமை திடீரென்று ஒருவர் எட்டு பேரைக் குத்திக் காயப்படுத்தியுள்ளார். 

தாக்குதலாளியான 38 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

கத்திக்குத்துக்கு ஆளானவர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மீதமுள்ளவர்கள் காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கத்தியால் குத்தப்பட்டவர்களில் ஐந்து பேரின் நிலை இன்னும் கவலைக்கிடமாக இருப்பதாக ஃபுஜிசான் நான்டோ தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. 

டோக்கியோவின் மேற்கே உள்ள ஷிசுவோகா மாகாணத்தில் உள்ள மிஷிமா நகரில் அமைந்துள்ள யோகோகாமா ரப்பர் நிறுவனத்திடமிருந்து அவசர அழைப்பு வந்ததாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

No comments