சீன வலைகள் வடக்கு கடலில்!
இந்திய அரசு போட்டியாக சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 1900 மீன்பிடி வலைகளை மன்னார் மாவட்டத்தில் பயன்படுத்துவதற்கு சீன அரசாங்கத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் மன்னார் மாவட்டம் மிகவும் மோசமான நிலையில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளது.
இடர் ஏற்பட்ட காலத்திலிருந்து மீனவர்களுடைய பிரதான கோரிக்கையாக, தங்களுக்கு வாழ்வாதாரம் வழங்கப்படவில்லை. கடந்த பத்து நாட்களுக்கு மேலாக மீனவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் இருக்கிறார்கள் எனவும் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்திய அரசு இலங்கைக்கு 17 வகையான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் 14 தொன்களுக்கும் அதிகமான உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய ஒரு தொகுதி, கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், இந்திய துணை உயர் ஸ்தானிகர் கலாநிதி சத்யஞ்சல் பாண்டேயினால் இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்டது.
17 மருந்துகளின் தொகுப்பில் முக்கியமாக இதய நோய் சிகிச்சை சேவைகள், நீரிழிவு நோய் மற்றும் அதன் தொடர்புடைய நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள் உள்ளதாக கூறப்படுகின்றது.

Post a Comment