கன்னியாவிற்கும் புத்தர் வந்தார்!



திருகோணமலை கடற்கரையில் புத்தர்சிலை முளைத்துள்ள நிலையில் அடுத்து கன்னியா வெந்நீரூறுப் பகுதியில் புதிதாக பெரிய புத்தர் சிலை ஒன்று திறப்பதற்ரகு தயார் படுத்தப்பட்டுவருகின்றமை அம்பலமாகியுள்ளது.

பாரம்பரிய சிவன் கோவில் 180 வருடங்கள் பழமையான பிள்ளையார் கோவிலுடன் இறந்தவர்களுக்கான பிதிர்கடன் செய்யும் இடமாகவும் கன்னியா உள்ளது. கோவில் இடம் முழுமையாக தனியாருக்கு சொந்தமாக இருந்திருந்த நிலையில் காணி உரிமையாளர்; தனது காணியை பிள்ளையார் கோவில் கட்ட வழங்கியிருந்தார்.

யுத்தம் முடிந்த பின் படிப்படியாக இடங்களை கொள்ளையடிகும் நோக்குடனும் பௌத்த மயப்படுத்தும் நோக்குடனும் தொல்பொருள் திணைக்களம் ஊடாக தமிழர் காலாகாலமாக இருந்த இடங்களை வழிப்பாட்டுத்தலங்களை கையகப்படுத்த நடவடிக்கைகள் தொடர்கின்றது.

எனினும் தற்போது வெந்நீர் ஊற்று பகுதியிலிருந்த சிவன் கோவிலும் பூட்டப்பட்டுள்ளது. பிதிர்கடன் செய்ய வருபவர்களுக்கு அதற்கு முன் பல அனுமதிகள் எடுக்க வேண்டியிருக்கின்றது.

இராணவன் வரலாற்றுப் பதாகை உடைக்கப்பட்டு, புது அனுராதபுர வரலாறு எழுதப்பட்டுள்ளது. விகாரை உருவாக்கப்பட்டுள்ளது. உப்புவெளி பிரதேச சபையிடம் இருந்த இடம் தொல்பொருள் திணைக்களத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது கன்னியா வெந்நீரூறுப் பகுதியில் புதிதாக பெரிய புத்தர் சிலை ஒன்று திறப்பதற்ரகு தயார் படுத்தப்பட்டுவருகின்றமை அம்பலமாகியுள்ளது.


No comments