கிளிமஞ்சாரோ மலையில் உலங்கு வானூர்தி விபத்து: ஐந்து பேர் உயிரிழப்பு


தான்சானியாவின் கிளிமஞ்சாரோ மலையில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்ததாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த விபத்து பராஃபு முகாமுக்கும் கிபோ சம்மிட்டிற்கும் இடையில் 4,000 மீட்டர்  உயரத்தில் நிகழ்ந்தது.

நோயாளிகளை ஏற்றிச் செல்லும் மீட்புப் பணியின் போது, ​​பிரபலமான மலையேற்றப் பாதையில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

பலியானவர்களில் இரண்டு வெளிநாட்டினர், ஒரு உள்ளூர் மருத்துவர், ஒரு சுற்றுலா வழிகாட்டி மற்றும் விமானி ஆகியோர் அடங்குவர்.

விபத்துக்கான காரணத்தை உடனடியாகக் கண்டறிய முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments