இங்கிலாந்தில் 5 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்த மருத்துவர்கள்


இங்கிலாந்தில் இளைய மருத்துவர்கள் ஐந்து நாள் வேலைநிறுத்தத்தைத் ஆரம்பிக்கிறார்கள். இப்போராட்டம் இன்று புதன்கிழமை காலை 7 மணி முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதனால் நோயாளிகள் பொிதும் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நீண்டகால ஊதியப் பிரச்சனையை முன்னிட்டு இளநிலை மருத்துவர்கள் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய என்எச்எஸ் (NHS) உடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.

நேற்று இருதரப்பினருக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. எனினும் வேலைநிறுத்தத்தை பின்வாக்குவதற்கான போதுமான முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதால் இளைய மருத்துவர்கள் இப்போராட்டத்தை கூறியபடியே இன்று முன்னெடுக்கின்றனர்.

என்எச்எஸ் இல் பணிபுரியும் மருத்துவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் இளைய மருத்துவர்களாக உள்ளனர். அவர்கள் அவசர மற்றும் அவசரமற்ற சிகிச்சைப் பிரிவுகளில் இருந்து அவர்கள் வெளியேறுவார்கள் என்பதனால் மூத்த மருத்துவர்கள் பாதுகாப்பு வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments