மீண்டும் கதிரையோட்டம்!

 


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதியும், சிரேஸ்ட பேராசிரியருமான திருநாவுக்கரசு வேல்நம்பி புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை பெற்றிருக்கிறார்.

விண்ணப்பித்தவர்களில் புள்ளிகளின் அடிப்படையில் சிரேஸ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி முதல் நிலையையும், விவசாயபீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், சிரேஸ்ட பேராசிரியருமான கு.மிகுந்தன், மருத்துவ பீடாதிபதியும், பேராசிரியருமான இ.சுரேந்திரகுமாரன் ஆகியோர் முறையே இரண்டாம், மூன்றாம் நிலைகளையும் பெற்றுக் கொணடுள்ளனர்.

குடந்த காலங்களில் துணைவேந்தர் நியமனங்கள் ஜனாதிபதிகளது விருப்ப முடிவிலேயே அமைந்திருந்தது.

எனினும் தற்போதைய ஆட்சியாளர்கள் வாக்களிப்பின் அடிப்படையில் துணைவேந்தர்கள் தெரிவு முன்னெடுக்கப்படுமென அறிவித்திருந்த நிலையில் இம்முறை துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதியும், சிரேஸ்ட பேராசிரியருமான திருநாவுக்கரசு வேல்நம்பி புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை பெற்றிருக்கிறார்.


No comments