அனுர அரசின் நிவாரண சலுகை!
யாழ்ப்பாணம், தையிட்டியில் பௌத்தவிகாரைக்கென ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சுமார் 8 ஏக்கர் தனியார் காணிகள் அபகரிக்கப்பட்டு சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்டுள்ள நிலையில், அந்தக் காணிகளில் சுமார் 2 ஏக்கரை விடுவிக்க அரசாங்கம் அவசர நடவடிக்கை எடுத்துள்ளது.
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றி, தமிழ் மக்களின் காணிகளை மீள உரிமையாளர்களுக்கு வழங்கவேண்டும் என்ற போராட்டம் வலுப்பெற்றிருக்கும் நிலையில் ஜவர் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்ட தவத்திரு வேலன்சுவாமிகள் மற்றும் வலிகாமம் கிழக்கு பிரதேச தவிசாளர் நிரோஸ் ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே எட்டு குடும்பங்களுக்குச் சொந்தமான அண்ணளவாக இரண்டு ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், அந்த நடவடிக்கைக்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Post a Comment