இந்தியா தற்போது நல்லம்:ஜேவிபி



சூறாவளி, வெள்ளப்பெருக்கு,  மண்சரிவு  காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கைக்கு வந்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக மருத்துவ சேவைகளை வழங்கிய இந்திய இராணுவ மருத்துவ குழுவினர் இன்று (14) மதியம் கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டனர்.

 இந்திய இராணுவ மருத்துவக் குழுவினருக்கு சுகாதார அமைச்சர் உட்பட சுகாதார அமைச்சக குழுவினர், இந்திய தூதரக குழுவினர் நன்றி தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.

வெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்த மஹியங்கனை ஆதார மருத்துவமனையில் சிகிச்சை சேவைகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டதால், மஹியங்கனை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான சிகிச்சை சேவைகளை வழங்குவதற்காக 85 பேர் கொண்ட இந்திய இராணுவ மருத்துவக் குழு   நாட்டிற்கு வந்தது. மஹியங்கனை நகரத்தின் மையத்தில் ஒரு சிறப்பு நடமாடும் மருத்துவமனை அமைக்கப்பட்டு சிகிச்சை சேவைகள் வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.


No comments