நெடுந்தீவு இறங்குதுறையில் படகு கட்டியிருந்த கயிற்றில் தடுக்கி கடலில் விழுந்தவர் உயிரிழப்பு


யாழ்ப்பாணம் , நெடுந்தீவு இறங்குதுறையில் படகுகள் கட்டியிருந்த கயிற்றில் தடக்கி , கடலினுள் விழுந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

நெடுந்தீவு 15ஆம் வட்டாரத்தை சேர்ந்த பரராஜசிங்கம் பிரேம்குமார் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

நெடுந்தீவு இறங்குதுறையில் இருந்து இன்றைய தினம் புதன்கிழமை காலை குறிகாட்டுவான் நோக்கி புறப்பட இருந்த படகில் ஏற சென்ற வேளை , இறங்குதுறையில் படகுகள் கட்டி இருந்த கயிற்றில் தடக்கியதில் தடுமாறி கடலினுள் விழுந்து நீரில் மூழ்கி காணாமல் போனார். 

உடனடியாக கடற்படை சுழியோடி வீரர்கள் கடலில் குதித்து , தேடிய நிலையில் , நீண்ட நேர தேடலின் பின்னர் , சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


No comments