ரி-56 ரக துப்பாக்கியுடன் 64 வயதுடைய முதியவர் கைது - பல கொலைகள் திட்டமிடப்பட்டிருந்ததாம்


எல்பிட்டிய - படபொல, சடாமுல்ல பகுதியில் ரி-56 ரக துப்பாக்கியுடன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து ரி 56 ரக துப்பாக்கி, 02 மகசின்கள் மற்றும் 45 தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சாதமுல்ல பகுதியை சேர்ந்த 64 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சந்தேகநபர் ஒரு திட்டமிட்ட குற்றவாளியின் நெருங்கிய நண்பர் என்றும், இந்த துப்பாக்கியைப் பயன்படுத்தி பல கொலைகளைச் செய்யத் தயாராகி வந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை படபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments