யாழில். குடை பிடித்தவாறு தேசிய கொடியேற்றிய அமைச்சர்
கொட்டும் மழைக்கு மத்தியில் குடை பிடித்தவாறு கடற்தொழில் அமைச்சர் , தேசிய கொடியை ஏற்றிய சம்பவம் கடும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.
தேசிய பாதுகாப்பு தினம் மற்றும் சுனாமி ஆழிப்பேரலையின் 21 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் கொட்டும் மழைக்குள் குடை பிடித்தவாறு கடற்தொழில் அமைச்சர் தேசிய கொடியினை ஏற்றியுள்ளார். அதன் போது கூட மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் ரி. என். சூரியராஜா ஆகியோரும் உடனிருந்தனர்.
அமைச்சர் குடை பிடித்தவாறு தேசிய கொடி ஏற்றும் போது , மாவட்ட செயலரும் , அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் குடை பிடித்தவாறு உடனிருப்பது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

Post a Comment