நியூசிலாந்து ஆக்லாண்ட் மாவீரர் நாள்
இன்று 27/11/2025 தமிழீழ தேசிய மாவீரர் நாளானது நியூசிலாந்தில் உள்ள இல் வெளியக மைதான அரங்கில் மாலை 6.00 மணியளவில் பெருந்திரளான மக்கள் முன்னிலையில் பெரும் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது. இன் நிகழ்வுக்கு பல்வேறுபட்ட நியூசிலாந்து தமிழ் அமைப்புகள் கலந்து கொண்டிருந்தமை சிறப்பம்சமாகும்.
பொதுச்சுடரானது முன்னாள் மாவீரர் பணிமனை பொறுப்பாளர் திரு.அசோக் அவர்களால் ஏற்றப்பட்டது.
நியூசிலாந்து தேசிய கொடியானது திரு.சுந்தர்ராஜன் அவர்களால் ஏற்றப்பட்டது.
தமிழீழ தேசிய கொடியினை முல்லைத்தீவு சாலைப்பகுதியில் சிறீலங்கா இராணுவத்தினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குலில் வீரச்சாவடைந்த கேணல் சலீம் மற்றும் திருகோணமலை புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் டோறாப்பீரங்கிப் படகு மூழ்கடிக்கப்பட்ட சமரில் வீரச்சாவடைந்த கப்டன் பூவேந்தன் ஆகிய இரு மாவீரர்களின் சகோதரி திருமதி.நடராசா விக்னேஸ்வரி அவர்களால் ஏற்றப்பட்டது.
தமிழீழகொடி ஏற்றும் போது தமிழீழ தேசிய கீதமானது இசைக்கப்பட்டு பெரும் உணர்வெழுச்சியுடன் மக்களால் மரியாதை செலுத்தப்பட்டது.
மாவீரர் நாள் மரபின் படி மணியோசை இசைக்கப்பட்டது. பின்னர் அகவணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து ஈகைச்சுடரனது வீரவேங்கை ஆர்த்தினியின் தாயார், பத்மலோஜினி ஏற்றிவைத்தார்.
பின்னர் மாவீரர் உணர்வுகளை தாங்கிய பாடல் ஒலிக்கும் போது, மக்களால் எம் தமிழீழ மண்ணின் விதையாய் வீழ்ந்த மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் மலரஞ்சலி செலுத்தினர்.
மேலும் நியூஸிலாந்தில் வசித்துவரும் பெற்றோர் மற்றும் சகோதரர்களின் குடும்பத்தை சார்ந்த மாவீரர்களுக்கு, விதையுடல் தாங்கிய மாவீரர் தூபி அமைக்கப்பட்டு, உணர்வெழுச்சியுடன் மலரஞ்சலி செலுத்தப்பட்டது சிறப்பம்சமாகும்.
தொடர்ந்து மாவீரர்களின் திருவுரு படங்களுக்கு அஞ்சலி செலுத்த நிகழ்வுகள் யாவும் ஆரம்பமானது.
பின்னர் தமிழீழ எழுச்சி பாடல்கள், எழுச்சி நடனம், நாடகம் என பல கலை நிகழ்வுகளோடு மாவீரர் நாள் சிறப்புற நிறைவுற்றது.



































































Post a Comment