பதுளையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு: 28 பேர் காணாவில்லை!


பதுளை மாவட்டத்தை பாதித்த மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 35 ஆக உயர்ந்துள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் உறுதிப்படுத்துகிறார்.

இந்த அனர்த்தம் காரணமாக மேலும் 28 பேர் காணாமல் போயுள்ளதாக மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார்.

மோசமான வானிலை மற்றும் நிலச்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.

No comments