ஹிங்குரக்கொட பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினரும் சகோதரனும் கைது
ஹிங்குரக்கொட பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் ஹிங்குரக்கொட பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த உறுப்பினரின் சகோதரர் மின்சார சபையின் ஊழியர் ஒருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவத்துடன் தொடர்புடையவராக ஹிங்குரக்கொட பொலிஸாரால் முன்னதாக கைது செய்யப்பட்டிருந்தார்.
அதன்பின்னர், குறித்த பிரதேச சபை உறுப்பினர், தமது சகோதரரை விடுவிக்குமாறு கோரி பொலிஸ் நிலையத்துக்குச் சென்று, அங்கிருந்த அதிகாரிகளை அச்சுறுத்தியதாக கூறப்படுகின்றது.
இதனை அடுத்து பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான பிரதேச சபை உறுப்பினர், ஹிங்குரக்கொட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், தலா 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த பிரதேச சபை உறுப்பினரின் சகோதரரையும் பிணையில் விடுவிக்குமாறு ஹிங்குரக்கொட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment