நீதிமன்றத்துக்கு வேந்தன்!



தமிழரசுக்கட்சியின் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்  சிவஞானம் சிறீதரன் அவர்களின் பிரத்தியேக சாரதியுமான பாரதிதாசன் எழில்வேந்தன் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தொடுத்த வழக்கிற்கு அமைய கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக இன்று அழைக்கப்பட்டு கைதாகிய நிலையில் வேந்தன் ஆள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

மறைந்த விடுதலை புலிகளின் உறுப்பினர்களின் படங்களை வைத்து அஞ்சலி செலுத்திய காரணத்தால் காவல்துறை எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்ததாக கூறப்படுகின்றது.


No comments