யாழில். உள்ளக விளையாட்டரங்கு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ளக விளையாட்டரங்கினை பழைய பூங்கப் பகுதியில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
உள்ளக விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல்லினை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் மற்றும் யாழ்ப்பாண செயலர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோர் நாட்டி வைத்தனர்.
அதனை தொடர்ந்து நடைபெற நிகழ்வில் நிகழ்வில் தெற்காசிய ரீதியில் இடம்பெற்ற விளையாட்டுப்போட்டிகளில் பங்குபற்றிய வீரர்களுக்கு விருந்தினர்களால் பதக்கங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
நிகழ்வில் விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள் விளையாட்டு வீரர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.




Post a Comment