யாழில். மூன்று குழந்தைகளை பிரசவித்த தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் சுமார் 20 வருடங்களின் பின்னர் ஒரே பிரசவத்தில் , மூன்று குழந்தைகளை பிரசவித்த தாயார் , ஒரு மாத காலம் தீவிர சிகிச்சைபெற்று வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
வடமராட்சி வதிரி பகுதியை சேர்ந்த யோகராசா மயூரதி (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணுக்கு, திருமணமாகி கடந்த 20 வருடங்களாக குழந்தைகள் இல்லாத நிலையில் , இந்த வருடம் கர்ப்பம் தரித்த நிலையில் , கடந்த மாதம் 07ஆம் திகதி ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பிரசவித்தார்.
அதனை அடுத்து அவரது உடல் நிலை மோசமானதை தொடர்ந்து கடந்த ஒரு மாத காலமாக யாழ் . போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
பிறந்த மூன்று குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் , உயிரிழந்த பெண்ணின் உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே மரணத்திற்கான காரணத்தை கூற முடியும் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment