கால்வாய்க்குள் கார் கவிழ்ந்து விபத்து - மூவர் உயிரிழப்பு
அம்பாறை - சாய்ந்தமருது பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
கால்வாயில் மூழ்கிய கார் மீட்கப்பட்டு, காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன் - மனைவி மற்றும் அவர்களின் பேர்த்தியான சிறுமி ஆகிய மூவரும் மீட்கப்பட்டு கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மூவரும் உயிரிழந்துள்ளனர்
இச்சம்பவம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment