நெடுந்தீவில் தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமான கற்களை சேதப்படுத்திய குற்றம் - நெடுந்தீவு தவிசாளர் உள்ளிட்டவர்களுக்கு பிணை


நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை சுற்றி தொல்லியல் திணைக்களத்தால் நாட்டப்பட்டிருந்த எல்லைக்கற்களை சேதமாக்கிய குற்றச்சாட்டில் கைதான நெடுந்தீவு தவிசாளர் உள்ளிட்ட 06 பேரையும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று பிணையில் செல்ல அனுமதித்துள்ளது 

நெடுந்தீவில் வெடியரசன் கோட்டை அமைந்துள்ள பகுதியில் உள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதி புனரமைப்பு வேலைகள் முன்னெடுக்கப்பட்ட வேளை , வீதியோரமாக நாட்டப்பட்டிருந்த எல்லை கற்கள் சேதமடைந்துள்ளது. 

இது தொடர்பில் நெடுந்தீவில் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளின் முறைப்பாட்டின் பிரகாரம் , வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்ட  உழவு இயந்திர சாரதிகள் இருவர் , நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் , பிரதேச சபை தொழிநுட்ப உத்தியோகஸ்தர்  , வீதி ஒப்பந்தக்காரர் உள்ளிட்ட ஆறுபேரை பொலிஸார் கைது செய்து , ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர். 

வழக்கு விசாரணைகளை அடுத்து, 06 பேரையும் பிணையில் செல்ல அனுமதித்த மன்று , வழக்கினை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு திகதியிட்டுள்ளது. 

No comments