அநுராதபுரத்தில் பேருந்து விபத்து! ஐவர் உயிரிழப்பு! 40க்கு மேற்பட்டோர் காயம்!


அநுராதபுரம் பகுதியில் தனியார் பேருந்து விபத்துக்கு உள்ளானதில் , ஐவர் உயிரிழந்துள்ள நிலையில் 40 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அவர்களில் சில ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் , உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

அத்துடன் , காயமடைந்தவர்கள் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய பின்னர் வீடு திரும்பிய மாணவர்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 


No comments