இளவரசர் ஆண்ட்ரூவின் அரச பட்டங்கள் மற்றும் இல்லமும் பறிக்கப்பட்டது

 


பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லஸ், இளவரசர் ஆண்ட்ரூவின் மீதமுள்ள பட்டங்களை பறித்து , அவரை அரச இல்லமான ராயல் லாட்ஜிலிருந்து வெளியேற்றுவதற்கான முறையான செயல்முறையைத் தொடங்கியுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

அவர் இனி ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் என்று அழைக்கப்படுவார்.

மன்னர் சார்லஸின் இளைய சகோதரரும், மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இரண்டாவது மகனுமான ஆண்ட்ரூ , தனது நடத்தை மற்றும் அமெரிக்க பாலியல் கடத்தல்காரர் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் காரணமாக பெருகிய அழுத்தத்தை எதிர்கொண்டார் . இந்த மாத தொடக்கத்தில், அவர் தனது டியூக் ஆஃப் யார்க் பட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அவர் மீதான குற்றச்சாட்டுகளை அவர் தொடர்ந்து மறுத்து வந்தாலும், இந்த கண்டனங்கள் அவசியமானதாகக் கருதப்படுகின்றன என்று அரண்மனை  தெரிவித்துள்ளது.

prince andrew

No comments