சாவகச்சேரியில் இன்று முதல் தினமும் சத்திர சிகிச்சைகள்




சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் சத்திரசிகிச்சைக் கூடம் இன்றைய தினம் புதன்கிழமை முதல் மீண்டும் தினமும் இயங்கவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

மருத்துவ கிளிநொச்சி மருத்துவமனையின் மயக்க மருந்து மருத்துவர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் புதன்கிழமை அவர் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் இரண்டாவது மயக்க மருந்து மருத்துவராகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார். 

இதையடுத்தே, சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் சத்திர சிகிச்சைக்கூடம் இன்றைய தினம் முதல் மீண்டும் தினமும் இயங்கக் கூடிய நிலைமை ஏற்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

No comments