குருதியில் கிருமித்தொற்று - யாழில். முல்லைத்தீவு பெண் உயிரிழப்பு!


குருதியில் ஏற்பட்ட கிருமித்தொற்றுக் காரணமாக யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குடும்ப பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

முல்லைத்தீவு - வற்றாப்பளைப் பகுதியைச் சேர்ந்த வினோதரன் வினோதா (வயது-33) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார். 

இடுப்பு வலி மற்றும் திடீர் சுகவீனம் காரணமாக கடந்த 28ஆம் திகதி அந்தப்பெண் மாஞ்சோலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இதன்போது, குருதியில் கிருமித்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். 

இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். 

No comments