கஜேந்திரகுமார் பாதை தவறு!: சுமந்திரன்!
தமிழ் மக்களை தவறாக வழி நடாத்த வேண்டாமென நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் எம்.ஏ சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடகத்திற்கு தமிழரசு கட்சி குறித்து கருத்தொன்றை வழங்கி இருந்தார். அதாவது, “தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தான் தயாரித்த ஏக்ய ராஜ்ய அரசியலமைப்பை வென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை பயன்படுத்தி தமிழ் மக்களிற்கு திணித்து அதனை யாரும் எதிர்க்காமல் நடைமுறைப்படுத்த முயல்கின்றார் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாவது அதனை எதிர்க்கின்ற வகையில் செயற்படும்.அத்தோடு, அதற்கு துணைபோகும் வகையிலும் மற்றும் ஏக்யராஜ்யத்தை நிறைவேற்றுவதற்கும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்க கூடாது” என அவர் தெரிவித்திருந்தார்.
தற்போதைய அரசியலமைப்பில் ஒற்றையாட்சிக்கு நிகரான சிங்கள சொல்லாக பாவிக்கப்பட்டிருப்பது ஏக்கிய ரஜய எனும் சொல்.இந்நிலையில், நாங்கள் தயாரித்த வரைபில் பயன்படுத்தப்பட்டிருப்பது ஏக்கிய ராஜ்ய எனும் சொல்.இந்த வரைபில் மூன்று மொழிகளிலும் நாங்கள் ஒரே சொற்றொடரைத்தான் பயன்படுத்தி இருந்தோம்.
அத்தகைய விடயங்களை தெளிவாக விளங்கப்படுத்தாமல் ஏக்கிய ராஜ்யத்திற்கு இணங்கிவிட்டார்கள், ஏக்கிய ராஜ்யத்திற்கு இணங்கிவிட்டார்கள் என தெரிவித்து எந்த பயனும் இல்லை.
தமிழ் மக்களுக்கு அதனை விளங்கப்படுத்துவது கடினம், ஒற்றையாட்சியை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
ஆனால், சமஸ்டிக்குரிய அரசு என பெயர் இருக்க வேண்டும் என்று நாங்கள் நிர்பந்திக்கவில்லை.
தந்தை செல்வாவின் வழியும் அது அல்ல, அவர் கைசாத்திட்ட ஒப்பந்தங்கள் ஒன்றிலும் சமஸ்டி என்ற சொல் உபயோகிக்கப்படவில்லை” எனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
Post a Comment