வெலிக்கடை படுகொலை ஒருவாரம் முன்பே திட்டமிடப்பட்டது!
1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறை சலையில் 53 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை சிறையில் ஏற்பட்ட கலவரம் அல்ல .சிறைக்கு வெளியில் ஒரு வாரத்துக்கு முன் அப்போதைய ஜனாதிபதி ஜே ஆரின் மருமகனான இராணுவ தளபதி திஸ்ஸ வீரதுங்கவினால் திட்டமிட்ட படுகொலை நிகழ்வு என சிங்கள எழுத்தாளரும் முன்னாள் ஊடகவியலாளருமான நந்தன வீரரட்ன யாழில் தெரிவித்தார்.
நேற்று சனிக்கிழமை யார் தந்தை செல்வா நினைவு அரங்கில் இடம் பெற்ற கறுப்பு ஜூலையின் 7 நாட்கள் என்ற நூல் வெளியீட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் சுமார் 40 வருடங்கள் காத்திருந்து 2013 ஆம் ஆண்டு யாழ்ப்பாண தீயிடல் என்ற நூலை சிங்கள மொழியில் புலனாய்வு அறிக்கையிடல் மூலம் எழுதினேன்.
இதை ஏன் நான் சிங்கள மொழியில் எழுதினேன் என்றால் யாழ்ப்பாண பொது நூலகம் ஏன் எரிக்கப்பட்டது யாரால் எரிக்கப்பட்டது என்ற உண்மை நான் புத்தகம் எழுதும் வரை பலருக்கு தெரியாது.
யாழ்ப்பாண தீயிடல் என்ற நூல் ஒரு மாதத்தில் பத்தாயிரம் பிரதிகள் சிங்கள மக்களிடம் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்னும் குறித்த நூலுக்கான சிங்கள வாசகர்கள் அதிகமாக கேட்கின்ற நிலையில் எங்களால் உடனடியாக அச்சிட்டு வழங்க முடியாத நிலை காணப்படுகிறது.
தற்போது கறுப்பு ஜூலையில் ஏழு நாட்கள் என்ற நூலை யாழ்ப்பாணத்தில் இரண்டு மொழிகளிலும் வெளியிட்டுள்ளேன்.
இந்த நூலில் கறுப்பு ஜூலையில் சூத்திரதாரிகள் யார் யாருக்காக தமிழ் மக்களை கொன்றொழித்தார்கள் உண்மையில் வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகளுக்குள் ஏற்பட்ட முரண்பாடா கலவரத்தின் பின்னணி , வெலிக்கடை சிறைச்சாலைக்கு தமிழ் இளைஞர்கள் எவ்வாறு கொண்டுவரப்பட்டார்கள் போன்ற பல புலனாய்வு தகவல்களை ஆதாரத்துடன் எழுதியுள்ளேன்.
அனேகமானவர்கள் இன்றும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலைக்குள் கைதிகளுக்குள் ஏற்பட்ட முரண்பாடு தான் குட்டிமணி உட்பட 53 தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டமைக்கு காரணம் என.
உண்மை அது அல்ல நான் அக்காலப் பகுதியில் சிறைச்சாலையின் பிரதம சிறை காவலரை நேரடியாக வாக்குமூலம் பெற்றேன்.
1983 யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் பூத உடலை கொழும்புக்கு எடுத்துச் சென்று கலவரத்திற்கான திட்டத்தை ஜே ஆர் வகுத்தார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் குட்டிமணி உட்பட 53 தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டமை சிறையில் ஏற்பட்ட கலவரம் அல்ல ஒரு வாரத்துக்கு முன்னதாக நன்கு திட்டமிட்ட கொலை முயற்சி.
1981 அப்போதைய ஜனாதிபதி ஜே ஆர் மருமகனான இராணுவ தளபதி திஸ்ஸ வீரதூங்கவை ஜேஆர் யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கிறார் ஒரு வாரத்துக்குள் பயங்கரவாதத்தை அழித்து வரும் படி.
ஆனால் வீர துங்கவினால் அழிக்க முடியவில்லை .
ஆகவே இனியாவது இந்த உண்மைகள் சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் தெரிய வேண்டும் எனற நோக்கத்திற்காக
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இந்த நூலை இரு மொழிகளிலும் வெளியிட்டு வைக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment