கலைக்கமாட்டோம்:சந்திரசேகர்

 


மலையக அபிவிருத்தி அதிகார சபை இல்லாதொழிக்கப்படாதென்றும் அது தொடர்பில் அரசாங்கம் எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

அந்த அதிகார சபையை விரிவாக்கம் செய்து முன்னெடுத்துச் செல்வதே அரசாங்கத்தின் தீர்மானம். மலையக மக்களையும் அவர்களுக்கான நிறுவனங்களையும் அரசாங்கம் பாதுகாக்கும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; மலையக அபிவிருத்தி அதிகார சபையை அரசாங்கம் ஒரு போதும் இல்லாதொழிக்காது. அவ்வாறான ஒரு தீர்மானமும் கிடையாது.

பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையிலான குழுவில் மேற்படி அதிகார சபையை மேலும் விரிவு படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதே தவிர, அதனை இல்லாதொழிக்கும் தீர்மானம் எடுக்கப்படவில்லை.


அந்த வகையில் மலையக அபிவிருத்தி அதிகார சபை எந்த வகையிலும் இல்லாதொழிக்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் தெரிவித்தார் .

No comments