மகிந்தவிற்கு புலிகளால் எச்சரிக்கை!



புலிகளால் மகிந்தவிற்கு கொலை அச்சமென மீண்டும் புரளிகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள நிலையில்மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனம்  திருப்பி கையளிக்கப்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனம் நேற்று (03) திருப்பி கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் வாகனங்களை திருப்பி கையளிக்குமாறு அறிவிப்பு வந்தது. இந்நிலையில் தற்போது பாதுகாப்பு வாகனமும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக மஹிந்த ராஜபக்ஷவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என எச்சரித்துள்ள மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர், அடுத்த வாரம், பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு செயலர், மற்றும் பாதுகாப்பு பிரதானிகளைச் சந்தித்து மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு தேவையான வாகனங்களை பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கையை முன்வைப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

No comments