அருச்சுனா இலங்கை திரும்புவாராம்!



ஜநா அமர்விற்கு சென்றுள்ள நிலையில் சுவிஸ்ஸலாந்து நாட்டில் அரசியல் புகலிடம் கோரியுள்ளதான குற்றச்சாட்டை சுயேட்சைக்குழு யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் மறுதலித்துள்ளார்.

தூன் நாடு திரும்புவேன் போலிச் செய்திகளை நம்ப வேண்டாமென தனது நெருங்கிய ஆதரவாளர்களிடம் அருச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

அருச்சுனா இராமநாதன் சுவிஸ்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரி இருப்பதாக  சமூக ஊடகங்களில் இன்று முழுநாளும் செய்திகள் வெளிவந்திருந்தன.

அவ்வாறான செய்திகளில் உண்மையில்லை நாடு திரும்புவேன் என அருச்சுனா இராமநாதன் கருத்து பகிர்ந்துள்ளார்.

சுவிஸ்லாந்தில் ஜெனிவாவை மையமாக வைத்து அரசியல்  பிழைப்பு நடத்தும் சில அமைப்புக்கள் போலி செய்தியை பரப்பி உள்ளதாகவும் அருச்சுனா இராமநாதன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இதனிடையே ஐ.நாவின் ஜெனிவா மனிதவுரிமை கூட்டத்தொடரில் யார் பங்கேற்கலாம் என்ன செய்யலாம் எப்பொழுது பேசலாம் என்பதை பற்றிய அறிவு இல்லை. ஒரு நாட்டின் சட்டத்தை மதிக்காமல் செய்த விடயங்களுக்கெல்லாம் ஐ.நா வரை சென்று முறைப்பாடு செய்வது கோமாளித்தனமென பொதுதரப்புக்கள் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments