மீண்டும் கட்டிமுடிக்கப்பட்டது!
செம்மணி படுகொலைக்கு நீதி வேண்டி அப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட அணையா விளக்கு மீள இன்று மாலை கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.
இன்று காலையில் இனந்தெரியாதோரால் இடித்தழிக்கப்பட்டிருந்த அணையா விளக்கு இன்று மாலையில் மீண்டும் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் செம்மணி வளைவு பகுதியில் அமைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி முன்னதாக இடித்தளிக்கப்பட்டிருந்தது.
செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்திற்கு சர்வதேச நீதி கோரியும் யாழ்ப்பாணத்தின் செம்மணி பகுதியில்; ”அணையா விளக்கு” போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
போராட்டத்தின் நினைவாக அமைக்கப்பட்ட அணையா விளக்கு துபியே இடித்தழிக்கப்பட்டு சேதமாக்கப்பட்டிருந்தது.
இதனிடையே செம்மணிப் புதைகுழியில் இருந்து மீட்கப்படும் என்புக்கூடுகள், படுகொலைகளின் பிரதான சாட்சியங்களாகவே அமைந்துள்ளன. ஆதலால், புதைகுழி விடயத்தில் சர்வதேச விசாரணை அவசியம் என்று தேசிய சமாதான பேரவையின் நிர்வாக இயக்குநர் ஜெஹான் பெரேரா தெரிவித்திருந்தார். செம்மணியில் மீட்கப்பட்டுள்ள என்புத் தொகுதிகள் திட்டமிட்ட படுகொலைகளின் சாட்சியங்களாகவே அமைந்துள்ளதாகவும் ஜெஹான் பெரேரா தெரிவித்திருந்தார்.
Post a Comment