பிரான்சில் கடந்த 2 ஆண்டுகளில் 4 பிரதமர்கள் பதவி விலகல்!
நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரான்ஸ் பிரதமர் பிராங்கோயிஸ் பெய்ரூ தோல்வியடைந்தார்.
இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனிடம் பேய்ரூ பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளார்.
பிரதமர் பிரான்சுவா பேய்ரூவின் வெளியேற்றத்தை ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஒப்புக்கொண்டதாக எலிசி அரண்மனை தெரிவித்துள்ளது.
பிரதமர் பிரான்சுவா பேய்ரூவின் கடன் குறைப்பு திட்டத்தை நாடாளுமன்றம் நிராகரித்ததை அடுத்து, பிரான்ஸ் அரசாங்கம் சரிந்துள்ளது.
பேய்ரூவை பதவி நீக்கம் செய்ய சட்டமியற்றுபவர்கள் பெருமளவில் வாக்களித்தனர்.
ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் பதவிக் காலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 4 பிரதமர்கள் பதவி விலகியுள்ளனர். வரும் நாட்களில் அவர் ஐந்தாவது புதிய பிரதமரை நிமிக்க வேண்டிய நிலையில் உள்ளார்.
Post a Comment