இதுவரைக்கும் 7 நோபல் பரிசு கிடைத்திருக்க வேண்டும் - டிரம்ப் ஆதங்கம்


நாங்கள் நிறைய போர்களை தடுத்து நிறுத்தியிருக்கிறோம். ஆனால், இரு அணு ஆயுத நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போர் தீவிர கவனத்தில் கொள்ள கூடியது. உங்களுடன் வர்த்தகம் தொடர வேண்டும் என்றால் நீங்கள் போரை நிறுத்துங்கள் என கூறினேன். வர்த்தக உறவை முன்வைத்து அணு ஆயுத போரை நான் தடுத்து நிறுத்தினேன் என்று கூறி சர்ச்சையை தொடர்ந்து உள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் போர் மட்டுமின்றி, தாய்லாந்து மற்றும் கம்போடியா, அர்மீனியா மற்றும் அஜர்பைஜான், கொசோவோ மற்றும் செர்பியா, இஸ்ரேல் மற்றும் ஈரான், எகிப்து மற்றும் எத்தியோப்பியா, ருவாண்டா மற்றும் காங்கோ ஆகிய நாடுகள் இடையேயான போர்களையும் நிறுத்தியிருக்கிறோம்.

வர்த்தக காரணங்களுக்காக, இவற்றில் 60 சதவீதம் பேர் போரை நிறுத்தினர். இதனை நாங்கள் செய்தோம் என்று பெருமையுடன் கூறினார். அதனால், ஒரு போரை நிறுத்தியதற்கு ஒரு நோபல் பரிசு என்றால், எனக்கு இதுவரை அமைதிக்கான 7 நோபல் பரிசுகள் கிடைத்திருக்க வேண்டும் என்று அவர் ஆதங்கம் வெளியிட்டார்.

ரஷியா-உக்ரைன் போரை நிறுத்தினால், உங்களுக்கு நிச்சயம் நோபல் பரிசு கிடைக்கும் என என்னிடம் கூறப்பட்டது. ஆனால், அது பெரிய போராக உள்ளது என்றும் டிரம்ப் கூறியுள்ளார். 

No comments