மன்னாரை வைத்திருப்பது யார்?
மன்னார் போராட்டகாரர்கள் மீதான தாக்குதல் மத தலைவர்களது உட்கட்சி சண்டையென குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றது. அந்நிலையில்மன்னாரில் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களை காவல்துறையினர் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதுடன் மேலும் போராட்டத்தில் முன்னின்று செயற்படும் சமூக செயற்பாட்டாளர்கள் சிலரை கைது செய்வதற்கான நடவடிக்கையையும் முன்னெடுத்து வருகின்றனர்.
ஜனநாயக ரீதியாக நடைபெற்ற போராட்டத்தில் மக்களை தாக்கியது மாத்திரம் இல்லாமல் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையையும் காவல்துறையினர் மேற்கொண்டுள்ளமை கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment