பெருமளவான மீன்கள் பிடிபடுகின்றன : வடக்கு ஆளுநர்
கடல்நீரை நன்னீர் ஆக்கும் திட்டத்தை ஆரம்பித்த போது அவ்விடத்தில் உப்பின் செறிவு அதிகமாகும் என சிலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். சமுத்திரத்தில் உப்பின் செறிவை அதிகரிக்கும் அளவுக்கு நாம் இருக்கிறோமா ? மீன் வளம் அழியும் என்றார்கள். ஆனால் இப்ப அவ்விடத்தில் பெருமளவான மீன்கள் பிடிபடுகின்றன என தெரிவித்துள்ளார் வடக்கு ஆளுநர் வேதநாயகன்.
அதே போல பளையில் காற்றாடி மின்னாலைகள் வரும் போது மழை வராது என்றார்கள் இப்ப அங்க நல்ல மழை கிடைக்கிறது எனவும் நா.வேதநாயகன் யாழில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போது இன்றிரவு கருத்து தெரிவித்துள்ளார்.
மன்னாருக்கு காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றி வந்த வாகனங்களை தடுக்க முயன்ற மக்கள் மீது பொலிஸார் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதில் பலர் காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காற்றாலைக்கு எதிராக மன்னார் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடாத்தி வரும் நிலையில், காற்றாலை உதிரி பாகங்களை தீவுக்குள் கொண்டு செல்லும் முயற்சி நடந்துள்ளது.
நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் முதல் கட்டமாக காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றிவந்த வாகனங்களை மக்கள் தடுத்து நிறுத்த முற்பட்ட போதிலும் மக்களின் எதிர்ப்பை மீறி காற்றாலை உதிரிபாகங்கள் கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஆளுநர் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.
Post a Comment