மனோகரன் காலமானார்!
திருகோணமலை ஐந்து மாணவர்களின் கொலைக்கான நீதிக்காய் போராடியவரும், டொக்டர் மனோகரன் காலமானார்.
மரணம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள நண்பர் ஒருவர் "ரஜீகரின் பிறந்தநாள் இன்று .அவனுக்கான நீதிக்காய் ஓடிக் களைத்து பிறந்தநாளில் அவனோடு இணந்தார்.
2006 ஜனவரி 2ம் திகதி இரவில் இருந்து மனோகரன் அவர்களோடு உரையாடத் தொடங்கி இருந்தேன், இறுதி வரை ஏதோ ஒரு முயற்சிகளுக்காய் அவரோடு பேசிக் கொண்டே இருந்தேன்.
எமது கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இறுதி சடங்கில் தன் குடும்பத்தின் சார்பாக என்னை பேச அழைத்தார். அதன் பின் 31வது நாள் நிகழ்வை ஏற்பாட்டில் நான் முழுமையாக இருந்தேன்.
தொடர் கொலைகள் மற்றும் அச்சுறுத்தல்களால் அனைத்துப் பாதிக்கப்பட்ட குடும்பங்களும் நாட்டில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
டொக்டர் தொடர்ச்சியாக போராடினார், சர்வதேச நிறுவனங்களிடம் கண்ணீர் மல்க நீதி கேட்டார்.
அனைவருக்கும் தெரிந்த அரச பயங்கரவாதக் கொலைக்கு அவரால் இறுதிவரை நீதியைப் பெற முடியவில்லை.
2023 அவருடன் இணைந்து இங்கிருக்கின்ற சர்வதேச மன்னிப்புச் சபையிடம் மீண்டும் இந்த வழக்கை எடுக்குமாறு நான் கோரிக்கையை வைத்து ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்தேன். வைத்தியசாலையில் இருந்த படி அந்த நிகழ்வை நேரடியாக அவர் பார்த்தார்.
அடுத்த கட்டம் தொடர்பாக ஏதோ ஒன்றைச் செய்து கொண்டே இருந்தார். பல முறை உரையாடினார், இன்று வந்த அழைப்பில் அவரின் மகன் ஜெய்கரின் சோகக் குரல் மட்டும் ஒலித்தது. நீதி கேட்கின்ற அரசியல் போராட்டங்கள் எம்முள் இப்படித்தான் விதைக்கப்பட்டது.மனோகரன் அவர்களுக்கு இறுதிவரை நீதி எட்டவில்லை. ரஜீகருக்கும் நீதி கிடைக்கவில்லை "என தெரிவித்துள்ளார்;
Post a Comment