யாழில். குளித்து விட்டு உடலில் ஈரத்துடன் மின் அழுத்தியை பாவித்த இளைஞன் - மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
குளித்து விட்டு , உடலில் ஈரத்துடன் மின் அழுத்தியை பயன்படுத்திய போது , மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் உடுவில் பகுதியை சேர்ந்த விஷ்ணுராஜ் ஜதுர்மன் (வயது-21) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார் .
குளித்துவிட்டு வந்து மின்னழுத்தியைப் பயன்படுத்தியபோது, இளைஞனை மின்சாரம் தாக்கியுள்ளது. இதையடுத்து, வீட்டில் இருந்தோர் இளைஞனை மீட்டு தெல்லிப்பழை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, இளைஞன் உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Post a Comment