சார்லி கிர்க்கிற்கு அஞ்சலி செலுத்துவது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மோதல்
தேசியவாத சுவீடன் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான சார்லி வெய்மர்ஸ் (Charlie Weimers), சார்லி கிர்க்கை (Charlie Kirk) மதிப்பளிக்கும் வகையில் சபாநாயகர் ராபர்ட்டா மெட்சோலா ஒரு நிமிடம் அமைதி வணக்கம் செலுத்த அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
சார்லி வெய்மர்ஸ் தனது பேச்சு நேரத்தை விட்டுக்கொடுத்து அஞ்சலி செலுத்த முயன்றார். ஆனால் அமர்வுத் தலைவரால் அந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டு, நடைமுறை காரணங்களுக்காக அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்பட்டதாக ஏ.எவ்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவரது கட்சியைச் சேர்ந்த ஏனைய ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் மேசைகளில் மோதி எதிர்ப்பு தெரிவித்தனர். அதே நேரத்தில் மற்ற பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைவரின் தலையீட்டைப் பாராட்டினர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாக அமைப்பான ஐரோப்பிய ஆணையம் , அனைத்து வகையான வன்முறைகளையும் கண்டிக்கிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் உண்மையான அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியது.
Post a Comment