சந்தை திறப்பிலும் சதியாம்!
யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையம் மூன்றாவது தடவையாக மீள திறந்து வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் இ.சந்திரசேகர் தலைமையில் நடைபெற் நிகழ்வில் வர்த்தக, வாணிப, அமைச்சர் வசந்த சமரசிங்க, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
பொருளாதார மத்திய நிலையத்தை நாடாவெட்டி திறந்து வைத்ததுடன், மொத்த விற்பனை வியாபாரத்தையும் மீள திறந்து வைத்திருந்தனர்.
முன்னதாக மைத்திரிபால சிறிசேன பின்னராக மகிந்த ராஜபக்சவென திறந்து வைக்கப்பட்ட சந்தை தொடர்ந்தும் மூடியே இருந்திருந்தது.
இந்நிலையில் மூன்றாவது தடவையாக தற்போது வர்த்தக, வாணிப, அமைச்சர் வசந்த சமரசிங்க திறந்துவைத்துள்ளார்.
இதனிடையே இனவாதத்தை கிளப்பும் பிசாசுகள் மீண்டெழுந்துள்ளன.இந்த பிசாசுகளிடமிருந்து நாட்டை பாதுகாக்க மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரியுள்ளார்.
இனவாதம் என்ற பிசாசுக்கு எமது நாட்டில் நிரந்தமாக முடிவு கட்ட வேண்டும். அதற்குரிய நடவடிக்கையை நாம் முன்னெடுக்கும் போது பழைய பிசாசுகள் மீண்டெழுவதை காண முடிகின்றது.
பழைய திருடர்கள் ஓரணியில் திரண்டுள்ளனர். அதிகாரத்துக்காக சதி மற்றும் சூழ்ச்சிகளை செய்ய முடியுமா என்பது பற்றி ஆராய்கின்றனர்.
இனவாதத்தை தூண்டியேனும் தமது இருப்பை தக்க வைத்துக்கொள்ள முடியுமா என்பது பற்றியும் கதைக்கின்றனர். அது பற்றியே ரணிலும், மகிந்தவும் அவரது வீட்டில் மந்திராலோசனை செய்கின்றனர் எனவும் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
Post a Comment