இந்தியாவும் 13ம் ?
மாகாணசபை மட்டுமே தீர்வென கங்கணங்கட்டியுள்ள இந்தியா மாகாணசபை தேர்தலை நடாத்த அனுர அரசை கோரி களைத்துள்ளது.
இந்நிலையில் தமது முன்னாள்களை சீவி தேர்தல் வேண்டுமென கோரும் நாடகமொன்றை யாழில் இன்று நடாத்தியுள்ளது.
இந்தியாவை மீறி மாகாண முறைமையை எவராலும் இல்லாது செய்துவிட முடியாது மாகாணசபை முறைமையை நடைமுறைப்படுத்த தேர்தலை விரைவாக நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சர்வேஸ்வரன், தமிழரசுக் கட்சி சார்பில் ஆர்னோல்ட், ஈ.பி.டி.பி சார்பில் தவனாதன், புளொட் சார்பில் கஜதீபன், ரெலோ சார்பில் குகதாசன் ஆகியோர் இணைந்து ஊடக சந்திப்பு ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இன்றைய அரசு மாகாண சபை முறைமையை விரும்பாத ஒன்றாகவே இருக்கின்றது. கடந்த காலங்களில் இந்த அரசின் நிலைப்பாடு மாகாணசபை முறைமைக்கு எதிரானதாகவே இருந்தது.அரசுகள் தேர்தலை நடத்த அக்கறை காட்டுவதில்லை. அதையே இந்த அரசும் செய்கின்றது.
இதே நேரம் தமிழ் மக்களுக்கு இது அவர்களது இருப்புடன் தொடர்புடைய ஒன்று. ஆனால் ஏனைய மாகாணங்களுக்கு அது அவசியமற்றதாக இருக்கலாம்
தேர்தலை நடத்த அரசு விரும்பாவிட்டால் குறைந்த பட்சம் இதை வடக்கு கிழக்கிலாவது நடத்த வேண்டும். இதை அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலில் வலியுறுத்துகின்றன.
சர்வதேச சமூகம் எமது அரசியல் உரிமை குறித்து பேசுகின்றது. இந்திய அரசும் ஐ.நாவில் வலியுறுத்துகின்றதெனவும் தெரிவித்துள்ளனர்.
Post a Comment