ஜீவன் மகிந்தவிடம் சென்றார்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (28) காலை தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் நடைபெற்றது.
சந்திப்பின் போது, ரணில் விக்கிரமசிங்க சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் அவர் ஆற்றிய பங்கிற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு நன்றி தெரிவித்தார்.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, இ.தொ.கா பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், மற்றும் இ.தொ.கா நிதிச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் சந்தித்தனர்.
இந்த சந்திப்பு தங்காலை, கால்டன் இல்லத்தில் இன்று (28) இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது, அவர்கள் மஹிந்த ராஜபக்சவின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்ததுடன் கலந்துரையாடலிலும் ஈடுப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment