நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம் - 04ஆம் திகதி ஒப்பந்தம்
நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்த பணிகள் எதிர்வரும் 04ஆம் திகதி நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவு பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையம் இல்லாத காரணத்தால் , அப்பகுதி மக்கள் வேலணை பகுதிக்கு வந்தே தமக்கான எரிபொருட்களை பெற்று செல்கின்றனர்.
நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவானுக்கு சுமார் ஒரு மணி நேரம் படகில் கடல் பயணம் மேற்கொண்டு , குறிகாட்டுவானில் இருந்து ,வேலணை பகுதிக்கு தரை வழியாக சென்று எரிபொருட்களை கொள்வனவு செய்து , மீண்டும் நெடுந்தீவுக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலையிலையே அப்பகுதி மக்கள் காணப்படுகின்றனர்.
இந்நிலையில், நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக அங்கு வாழும் மக்கள் கோரிக்கைகளை முன் வைத்து வந்த நிலையில் , தற்போது எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்த நடவடிக்கைகள் எதிர்வரும் 4ஆம் திகதி நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவு போன்றே ஏனைய கடல் கடந்த தீவுகளுக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் என தீவுகளில் வசிக்கும் மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment