யாழில். ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞன் கைது
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 120 மில்லி கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் குருநகரை சேர்ந்த 36 வயதுடையவர் எனவும், கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment