ரணில் தொடர்ந்தும் தீவிர சிகிச்சையில்!
அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இன்னும் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவருகின்றது.
வைத்தியசாலையில் இருந்து அவர் எப்போது வெளியேறுவார் என்பது குறித்து வைத்தியர்கள் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டக் குழு, அவருக்கு பிணை வழங்குவதற்கு ஆதரவாக பல சிறப்பு உண்மைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
வழக்கு விசாரணையின் போது, ரணிலின் அனைத்து மருத்துவ அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டன.
இதற்கிடையில், நேற்று, தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி ருக்ஷன் பெல்லனா, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிறப்பு வைத்தியர்களின் பரிந்துரைத்தபடி, சுமார் இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்க வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார்.
Post a Comment