பிரித்தானியாவில் முன்னெடுக்கப்படும் தமிழீழ இனப்படுகொலைக்கு நீதிகோரி மிதியுந்துப்பயணம்

இலண்டன், ஆகஸ்ட் 28, 2025 – தமிழீழ இனப்படுகொலையின் நினைவாகவும், தமிழீழ விடுதலைக்கான கொட்டொலியோடும், இலண்டனில் இருந்து ஜெனீவா வரை மிதியுந்துப்பயணப் பேரணியானது ஆரம்பமாகியுள்ளது. இந்த நிகழ்வினை தமிழர் இளையோர் அமைப்பு - ஐக்கிய இராச்சியம் (TYO UK) மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு (TCC UK), மேலும் Council of Eelam Tamils - UK ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் நடைபெறுகிறது.

இந்தப் பேரணி இன்று வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் ஹரோ (Harrow) அலெக்சாண்ட்ரா அவென்யூ வில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.

பின்னர் மிதியுந்துப்பயணப் பேரணி பின்வரும் இடங்களை கடந்து செல்லும்:
• காலை 10:45 – ஈஸ்ட் ஹாரோ (HA2 6ND)
• காலை 11:20 – வெஸ்ட் ஹரோ (HA2 7AA)
• மதியம் 2:50 – ஹாமர்ஸ்மித் (W6 8NX)
• மதியம் 3:00 – பட்ணி(SW15 1AY)
• மாலை 4:00 – டூட்டிங் (SW17 0SU)
• மாலை 4:45 – மோர்டன் (SM4 5DD)

தமிழீழ இனப்படுகொலையின் அங்கீகாரத்திற்காக, இந்த மிதியுந்துப் பேரணி நெதர்லாந்து வழியாக ஜெனீவா வரை தொடர்ந்து பயணிக்க உள்ளது.

No comments