யாழில் 108 ஜோடிகளுக்கு இலவச திருமணம்!


யாழ் மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகத்திற்கும் உட்பட்ட திருமணம் செய்யாத மற்றும் பதிவுத் திருமணம் செய்து தாலி கட்டாதவர்கள் உள்ளிட்ட 108 ஜோடிகளுக்கு சிங்கப்பூரைச் சேர்ந்தவரும் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டவருமான துரை தம்பதியினரால், இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. 

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்திலே 108 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. 

திருமணத்திற்காக 108 தம்பதிகளையும் தெரிவு செய்வதற்கான ஏற்பாடுகளை யாழ்ப்பாண பிரதேச செயலர் ச.சுதர்சன், யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரன் ஆகியோர் மேற்கொண்டிருந்தனர். 

சிங்கப்பூர் தம்பதிகள் தமது மகளுக்கு திருமணம் செய்ததையடுத்து இவ்வாறு ஏனையவர்களுக்கும் தமது சொந்த நிதியினூடாக திருமணம் செய்து வைக்க எண்ணிய உயரிய சிந்தனையை மணமக்கள் வாழ்த்தியுள்ளனர்.

No comments