கிளிநொச்சியில் கோர விபத்து - இரு இளைஞர்கள் உயிரிழப்பு
கிளிநொச்சி பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து நுவரேலியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்கு வரத்து சபைக்கு சொந்தமான பேருந்து பரந்தன் அரச விதை உற்பத்தி நிலையம் முன்பாக இருந்த பேருந்து தரிப்பிடத்தில் பேருந்தினை நிறுத்திய போது , பின்னால் வந்த டிப்பர் ரக வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து பேருந்துடன் மோதி விபத்துக்கு உள்ளானது.
அதன் போது, டிப்பர் வாகனத்திற்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் , மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்களில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்த நிலையில் , மற்றையவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment