இலங்கையில் அதிக நேரம் நிகழும் சந்திர கிரகணம்


செப்டம்பர் 7 ஆம் திகதி இரவு வானத்தில் முழு சந்திர கிரகணம் தோன்றுவதால், இலங்கையர்கள் மற்றும் வானியல் ஆர்வலர்களுக்கு பார்வையிடும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

இந்த அற்புதமான நிகழ்வு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் முழுமையாகத் தெரியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் தலைவரும், வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளரும் ஆர்தர் சி கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவருமான பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். 

பூமி சூரியனை சுற்றி வரும் பாதையிலும், சந்திரன் பூமியை சுற்றி வரும் பாதையிலும் சில நேரங்களில் சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும். 

அப்போது, சூரிய ஒளி பூமியில் விழுந்தாலும் சந்திரன் மீது விழாது. இதனால் சந்திர கிரகணம் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

சந்திர கிரகணம் நிகழும் நேரம் பின்வருமாறு, 

கிரகணம் ஆரம்பம் - இரவு 8:58 (செப்டம்பர் 7) 

பகுதி கிரகணம் ஆரம்பம் - இரவு 9:57 

முழுமையான கிரகணம் - இரவு 11:01 

அதிகபட்ச கிரகணம் - நள்ளிரவு 11:42 

கங்கண கிரகணம் முடிவு - அதிகாலை 12:22 (செப்டம்பர் 8) 

பகுதி கிரகணம் முடிவு - அதிகாலை 1:26 

கிரகணம் முடிவு - அதிகாலை 2:25

No comments