சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நாளை யாழில் சர்வதேச நீதி கோரி போராட்டம்


சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி நாளைய தினம் சனிக்கிழமை வடக்கு கிழக்கில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

 வடக்கு - கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் நாளைய தினம் சனிக்கிழமை செம்மணியில் மாபெரும் போராட்டம் நடைபெறவுள்ளது. 

கிட்டு பூங்கா முன்றலில் இருந்து பேரணியாக சென்று, மனித புதைகுழிகள் காணப்படும் செம்மணி பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

குறித்த போராட்டத்திற்கு, பல்கலைக்கழக மாணவர்கள் ,  அரசியல் கட்சிகள் , பொது அமைப்புக்கள் , உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர் 

No comments