யாழில். பாரிய ஆயுத கிடங்கு - நீதவான் முன்னிலையில் அகழ்வு பணிகள்


யாழில் வீடொன்றின் வளவில் இருந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது.

கொட்டடி பகுதியில் உள்ள வீடொன்றில் மலசல கூடத்திற்கு குழி வெட்டிய போது, சந்தேகத்திற்கு இடமான பொதி காணப்பட்டமையால், அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

பொலிஸார் வந்து பொதியினை பார்வையிட்ட பின்னர், அது தொடர்பில் யாழ்.நீதாவன் நீதிமன்று அறிவித்து, அகழ்வு பணிக்கு அனுமதி பெற்றனர்.

அந்நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நீதவான் ஏ.ஏ. ஆனந்தராசா முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு பொதிகள் மீட்கப்பட்ன

குறித்த பொதிகளில் இருந்து ரி - 56 ரக துப்பாக்கிகள் 30 மற்றும் அவற்றுக்குரிய 5ஆயிரம் ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த ஆயுதங்கள் பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.






No comments