சிவப்பு விளக்கை மீறி தொடருந்தில் மோதிய மகிழுந்து ஓட்டுநர்
டியூஃபென்டல் ஏஜி தொடருந்து நிலையத்தில் மகிழுந்து ஒன்றில் பயணித்த ஓட்டுநர் ஒருவர் தொடருந்துக் கடவையைக் கடக்க முற்பட்ட போது மகிழுந்து தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது என ஆர்காவ் கன்டோனல் காவல்துறையினர் தெரிவித்தனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை மகிழுந்து ஓட்நர் பஹ்ன்ஹோஃப்பிளாட்ஸிலிருந்து வைனென்டல்ஸ்ட்ராஸ்ஸேவுக்குத் திரும்ப விரும்பினார். ஆனால் சிவப்பு விளக்கு ஒளிர்ந்திருந்த போதும் அதைப் பொருட்படுத்தாது தொடருந்துக் கடவையை மகிழுந்து ஓட்டுநர் கடந்தார்.
இதனால் வைனென்டல்/சுஹ்ரென்டல் பாதையில் அன்டர்குல்மில் இருந்து வந்து கொண்டிருந்த தொடருந்து மகிழுந்து மீது மோதியது. இந்த விபத்தில் மகிழுந்தின் முன்பகுதி கடுமையான சேதத்திற்கு உள்ளானது. நல்வாய்ப்பாக 61 வயதான மகிழுந்து ஓட்டுநர் காயமின்றி உயிர்பிழைத்தார். அத்துடன் தொடருந்தின் தண்டவாளமும் தேமடைந்தது.
Post a Comment