செங்கடலில் தாக்குதல்: கப்பல் மூழ்கத் தொடங்கியது! கப்பலின் பணியார்கள் மீட்பு:


செங்கடலில் ஒரு வணிகக் கப்பல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. சிறிய படகுகளில் வந்த குழு கப்பலை நோக்கி தானியங்கி துப்பாக்கிகள் மூலம் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததுடன் உந்துகணை (ஆ.பி.ஜி), கையெறி குண்டுகள் மூலமும் தாக்குதலை நடத்தியது.

இந்த சம்பவம் ஏமன் துறைமுகமான ஹொடைடாவிலிருந்து தென்மேற்கே 94 கிமீ (51 கடல் மைல்) தொலைவில் நடந்தது.

தாக்குதல் நடத்திய குழுக்கள் மீது பதிலுக்கு கப்பலின் பாதுகாப்புப் குழுவும் துப்பாக்கிச் சூடு நடத்தியது ன்று பிரிட்டனின் ராயல் கடற்படையால் நடத்தப்படும் UKMTO தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலின் விளைவாக கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு அதன் குழுவினர் கப்பலை விட்டு வெளியேறியதால் கப்பல் கடலில் மூழ்கத் தொடங்கியதாகவும் UKMTO தெரிவித்துள்ளது.

அந்தக் கப்பல் லைபீரியக் கொடியுடன் கிரேக்கத்திற்குச் சொந்தமான மொத்தக் கப்பல் மேஜிக் சீஸ் என அடையாளம் காணப்பட்டதாக கடல்சார் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேநேரம் நான்கு ஆளில்லா வானூர்தி மூலம் கப்பல் தாக்கப்பட்டதாக பிரிட்டிஷ் கடல்சார் பாதுகாப்பு நிறுவனமான ஆம்ப்ரே தெரிவித்தது.

தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலிய இராணுவத்தின் அரபு மொழி செய்தித் தொடர்பாளர் அவிச்சே அத்ரே, எக்ஸிற்கு "அவசர எச்சரிக்கை" விடுத்து, ஏமன் துறைமுகங்களான ஹொடைடா, ராஸ் இசா, சாலிஃப் மற்றும் ராஸ் அல்-கதீப் மின் நிலையத்தில் உள்ள மக்களை வெளியேறுமாறு அழைப்பு விடுத்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு வெடிப்புகள் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

No comments